என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவனந்தபுரத்தில் 4 சிறுவர்களை கடித்து குதறிய தெருநாய்கள்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
Byமாலை மலர்23 July 2016 4:50 AM GMT (Updated: 23 July 2016 4:50 AM GMT)
திருவனந்தபுரத்தில் 4 சிறுவர்களை கடித்து குதறிய தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்புறங்களிலும் ஏராளமான நாய்கள் சுற்றிதிரிந்தன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் கடித்து குதறியது.
நாய்க்கடிக்கு ஆளான மக்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றாலும் அதன்பின்பு தனியாக நடந்து செல்ல பயந்தனர். இதையடுத்து கேரளாவில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருந்தாலும் நாய்களின் எண்ணிக்கை இதுவரை குறைந்தபாடில்லை.
திருவனந்தபுரம் சங்கு முகம் பகுதியில் கடந்த சில வாரங்களாக நாய்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.தெருக்களில் விளையாடும் குழந்தைகளை நாய்கள் விரட்டிவிரட்டி கடித்தது. நாய்கடி பட்ட குழந்தைகள் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று முன்தினமும் இது போல தெருநாய்கள் இப்பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களை கடித்து குதறியது. ஒரு சிறுவனின் தாயாரையும் கடித்தது.
இதில் அபிஜித் என்ற 4 வயது சிறுவனின் முகம், கன்னம் பகுதிகளில் நாய் பாய்ந்து கடித்ததில் அந்த சிறுவன் பெரிதும் பாதிக்கப்பட்டான். அவனை பெற்றோர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது போல 9-ம் வகுப்பு படிக்கும் சரத், 4-ம் வகுப்பு படிக்கும் லிலின் உள்பட மேலும் 3 சிறுவர்களும் நாய்கடிப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். மகனை காப்பாற்ற சென்ற ஒரு தாயும் நாய்க்கடிக்கு ஆளானார்.
இதையடுத்து கேரளாவில் மீண்டும் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

Next Story
×