search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மீது வழக்கு
    X

    பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மீது வழக்கு

    பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    புதுடெல்லி:

    டெல்லி சங்கம் விகார் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மொகானியா. இவரது அலுவலகத்துக்கு சங்கம் விகார் தொகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்று குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்று புகார் மனு கொடுக்க சென்றார்.

    அப்போது அந்த பெண்ணுக்கும், தினேஷ் மொகானியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தினேஷ் மொகானியாவும், அவரது ஆதரவாளர்களும் பெண்ணை பிடித்து வெளியே தள்ளினார்கள். அவரிடம் தவறாகவும் நடந்து கொண்டனர்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் நெப் சாராய் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி எம்.எல்.ஏ. மீது இந்திய தண்டனைச் சட்டம் 506 (கிரிமினல் குற்றத்தில் ஈடுபடுதல்), 509 (பெண்ணிடம் தவறான வார்த்தைகள் பேசி அவமானப்படுத்துதல்), 323 (தண்டிக்கக்கூடிய வகையில் தன்னிச்சையாக காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ. மீது தொகுதி மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவுவதாக குற்றம் சாட்டினார்.

    நாங்கள் குடிநீர் கேட்டுத்தான் சென்றோம். பணம் கேட்டு செல்லவில்லை. நாங்கள் என்ன அவரை தாக்கினோமா? எம்.எல்.ஏ. என்றாலும் பொதுமக்களாக இருந்தாலும் அனைவரும் சமம்தான். எனவே எம்.எல்.ஏ. மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புகார் கொடுத்த பெண் கூறியதாவது:-

    நான் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சென்றபோது அவர் என்னை சந்திக்க மறுத்து விட்டார். தண்ணீர் பிரச்சனைக்காக தினமும் அவரை பார்க்க சென்றேன். எங்கள் புகார் மனுவை பெற்றுக் கொண்டதற்கான சீல் வைக்க மறுத்து விட்டார். இதுபற்றி கேட்டதற்கு என்னை பிடித்து தள்ளி விட்டார். பெண்களை கேவலமாக திட்டினார். அவர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×