search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க தாஷ்கண்ட் புறப்பட்டுச் சென்றார் மோடி
    X

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க தாஷ்கண்ட் புறப்பட்டுச் சென்றார் மோடி

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

    சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜ்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளை கொண்டு ‘எஸ்.சி.ஓ.’ என்னும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இயங்குகிறது. இந்த அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் சேர உள்ளன.

    இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தாஷ்கண்ட் புறப்பட்டுச் சென்றார்.

    இத்தகவலை டுவிட்டரில் பதிவு செய்துள்ள மோடி, ‘மத்திய ஆசிய நாடுகளுடனான நல்லுறவுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது. மேலும், இந்த பிராந்தியத்துடன் பொருளாதார மற்றும் பொதுமக்களிடையே உள்ள உறவுகளை மேம்படுத்த வேண்டும் என எப்போதும் விரும்புகிறது’ என கூறியுள்ளார்.

    இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் ‘என்.எஸ்.ஜி.’ என்னும் அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுமத்தில் இந்தியா உறுப்பினர் ஆவதற்கு சீனாவின் ஆதரவை கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×