search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தினால் தண்டுவடம் பாதிப்பு: ஆம்புலன்சில் காதலரை திருமணம் செய்த பெண்
    X

    விபத்தினால் தண்டுவடம் பாதிப்பு: ஆம்புலன்சில் காதலரை திருமணம் செய்த பெண்

    விபத்தினால் தண்டுவடம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த பெண் தனது காதலரை ஆம்புலன்சில் திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொலக்முரு தாலுக்காவில் உள்ள கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் நேத்ராவதி. நர்சிங் படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குருசாமி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஜூன் 5-ந்தேதி நடைபெறும் பிரமாண்ட திருமணத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    தனியார் அறக்கட்டளை அமைப்பு சார்பில் 23 ஜோடிகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரமாண்ட திருமணத்தில் தான் இந்த ஜோடி மணந்து கொள்ள திட்டமிட்டு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி நேத்ராவதி விபத்தில் காயம் அடைந்தார். அவரது தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதனால் பெங்களூரில் மேல் சிகிச்சை பெற்ற பிறகு சித்ரதுர்கா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் திட்டமிட்ட தேதியில் காதலரை மணந்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இது குறித்து அவர் டாக்டரிகளிடம் தெரிவித்தார்.

    படுக்கையை விட்டு நிற்கவோ அல்லது எந்திரிக்கவோ கூடாது என்று டாக்டர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டு திருமணத்திற்கு அனுமதி அளித்தார்.

    அதன்படி அவர் ஸ்டெச்சர் மூலம் ஆம்புலன்சில் திருமணம் நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆம்புலன்சில் வைத்து அவர் தனது காதலர் குருசாமியை திருமணம் செய்துக் கொண்டார். நேத்ராவதியின் கழுத்தில் அவரது காதலன் தாலி கட்டினார். ஆம்புலன்சில் நடந்த இந்த திருமணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
    Next Story
    ×