search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதவியேற்ற 2 ஆண்டுகளில் 37 நாடுகளுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி
    X

    பதவியேற்ற 2 ஆண்டுகளில் 37 நாடுகளுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி

    உலகின் முக்கிய நாடுகள் அனைத்துக்கும் சென்று வந்த ஒரே பிரதமர் என்ற சாதனையை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்றார்.

    பொருளாதார மேம்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் அவர் அதற்கு வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் பெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கிறார்.

    2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பூடானுக்கு முதலில் சென்றார். பிறகு பிரேசில், நேபாளம், ஜப்பான், அமெரிக்கா, மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி நாடுகளுக்கு சென்றார்.

    2015-ல் இலங்கை, மொரிசீயஸ், சீசெல்ஸ், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்சு, தென் கொரியா, மங்கோலியா, சீனா, வங்கதேசம், ரஷியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிசிஸ்தான், துர்க் மெனீஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், ரஷியா, பிரான்சு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளுக்கு சென்றார்.

    இந்த ஆண்டு பெல்ஜியம், ஈரான், சவுதிஅரேபியா, ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார். இன்று அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

    பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்ற பிறகு இதுவரை 37 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

    இந்த 37 நாடுகளுடன் வர்த்தகம், ராணுவம், அறிவியல் ஆய்வு, விண்வெளிதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல நூறு ஒப்பந்தங்களை மோடி செய்துள்ளார்.

    எந்த ஒரு இந்திய பிரதமரும் இந்த அளவுக்கு வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

    மேற்கத்திய நாடுகளுடன் பிரதமர் மோடி செய்துள்ள ஒப்பந்தங்களால் வர்த்தகத்தை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் விரைவான மேம்பாட்டுக்கு மாறியுள்ளது.

    பிரதமர் மோடி சில நாடுகளுக்கு ஒரு தடவைக்கும் மேல் சென்று வந்துள்ளார். அமெரிக்காவுக்கு 4 தடவை சென்றுள்ளார். இந்த 4 தடவையும் அவர் ஒபாமாவுடன் முக்கிய ஒப்பந்தங்கள் செய்துள்ளார்.

    பிரதமர் மோடி இன்னும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு மட்டும்தான் செல்லவில்லை. விரைவில் அவர் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    இதன் மூலம் உலகின் முக்கிய நாடுகள் அனைத்துக்கும் சென்று வந்த ஒரே பிரதமர் என்ற சாதனையை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்.
    Next Story
    ×