என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலேகான் வழக்கு: குற்றவாளிகளின் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Byமாலை மலர்6 Jun 2016 5:08 PM GMT (Updated: 6 Jun 2016 5:08 PM GMT)
நாசிக் மாவட்டம் மாலேகாவ் நகரின் படா கப்ரஸ்தான் பகுதியில் உள்ள மசூதி அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உத்தரவு.
மும்பை :
நாசிக் மாவட்டம் மாலேகாவ் நகரின் படா கப்ரஸ்தான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2006–ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 12 பேரை தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.
இதில், 8 பேர் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகாததால், அவர்களை விடுவித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. எஞ்சிய 4 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கருணை அடிப்படையில் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி மனோர் சிங், ராஜேந்திர சவுத்ரி, தனசிங் மற்றும் லோகேஷ் சர்மா ஆகிய 4 பேரும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில்ல் மனு தாக்கல் செய்தனர்.அதில், ‘‘இந்த வழக்கில் எங்களை தவறுதலாக இணைத்துவிட்டனர். எங்களுக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதி வி.வி.பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது. ‘‘தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்ததாக கூறப்படும் பெரும்பாலான பொருட்கள் சந்தைகளில் எளிதில் கிடைக்கின்றன. இதை வைத்து அவர்களை குற்றவாளிகள் என்று கருத முடியாது. ஆகையால், அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், ‘‘குற்றவாளிகளுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. தவிர, இது மிகவும் தீவிர குற்றம். ஆகையால், அவர்களுக்கு ஜாமீன் அளிக்க கூடாது’’ என வாதிட்டார்.இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி வி.வி.பாட்டீல், விசாரணை நிறைவில் 4 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story
×