search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளு குடிப்பதை மகள் தடுத்ததால் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு போலீஸ்காரர் தற்கொலை
    X

    கள்ளு குடிப்பதை மகள் தடுத்ததால் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு போலீஸ்காரர் தற்கொலை

    பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளு குடிப்பதை மகள் தடுத்ததால் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
    பாட்னா:

    பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளு குடிப்பதை மகள் தடுத்ததால் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

    பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் ஐந்தாம் தேதியில் இருந்து பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. நாட்டின் எந்தப்பகுதியிலும் சொட்டு சாராயம்கூட கிடைக்காமல் மதுவறண்ட மாநிலமாக பீகார் மாறிவிட்டதால் அம்மாநில குடிமகன்கள் போதையை தேடி பிறநாட்டு எல்லைக்குள்ளும் ஊடுருவ துணிந்து விட்டனர்.

    அவ்வகையில், பீகாரின் சிதாமாரி மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ள அண்டை நாடான நேபாளத்தின் ரவுட்டஹாட் மாவட்டத்துக்குள் நுழைந்து குடித்துவிட்டு, கும்மாளம் போட்ட 70 பேரை அந்நாட்டு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இனி நேபாளத்துக்குள் நுழைய மாட்டோம் என்ற வாக்குறுதியையும் எழுதி வாங்கிய பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னா அருகேயுள்ள சாதிக்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் அஜித் குமார் போடாரா(55) என்பவர் இன்று கள்ளு குடிப்பதை தனது மகள் தடுத்துவிட்ட விரக்தியில் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
    Next Story
    ×