என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்
Byமாலை மலர்5 Jun 2016 9:07 PM GMT (Updated: 5 Jun 2016 9:07 PM GMT)
காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ராகுல் காந்தி விரைவில் ஏற்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான ராகுல் காந்தி விரைவில் அக்கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ராகுல் தலைவராவதற்கு கட்சியின் மூத்த தலைவர்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் கட்சியின் தலைமை பொறுப்பை ராகுல் காந்தி விரைவில் ஏற்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ‘காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பது தொடர்பாக ராகுல் காந்தியிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன. கட்சி தலைவராக அவர் விரைவில் பொறுப்பேற்பார் என நம்புகிறேன். தற்போது கட்சியின் நடைமுறை தலைவராக இருக்கும் அவர், விரைவில் சட்டப்பூர்வ தலைவராக வேண்டும்’ என்றார்.
சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வந்தபோது கட்சி சந்தித்து வந்த சவால்களை போலவே தற்போதும் கட்சிக்கு முன்னால் பல்வேறு சவால்கள் இருப்பதாக கூறிய ஜெய்ராம் ரமேஷ், இவற்றை சமாளித்து ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக திறம்பட செயல்படுவதற்காக கட்சியை தயாரிக்க ராகுல் காந்தி வெகு விரைவில் கட்சி தலைவராக வேண்டும் எனவும் கூறினார்.

Next Story
×