search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோவில்களில் பெண்கள் நுழைவதற்கு டெல்லி பெண்கள் ஆணைய தலைவி ஆதரவு
    X

    கோவில்களில் பெண்கள் நுழைவதற்கு டெல்லி பெண்கள் ஆணைய தலைவி ஆதரவு

    கோவில்களில் பெண்கள் நுழைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அவர்கள் அனைத்து மத ஸ்தலங்களிலும் அனுமதிக்கப்பட வேண்டும் என சமத்துவ கோஷம் எழுப்புபவர்களுடன் இணைந்துள்ள டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் இன்று கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    பெண்கள் அனைத்து மத ஸ்தலங்களிலும் அனுமதிக்கப்பட வேண்டும்.  சபரிமலை குறித்த நீதிமன்ற உத்தரவுகளில் அரசு தாமதிப்பது ஆணாதிக்க எண்ணத்தினை பிரதிபலிக்கின்றது என கூறியுள்ளார்.

    தொடர்ந்து, மாதவிடாய் கால பெண்களை அசுத்தம் நிறைந்தவர்கள் என்று நடத்துவது ஏன்?  பெண்கள் மாதவிடாய்க்கு ஆளாகவில்லையெனில், ஆண்கள் பிறக்க முடியாது!  பிறப்பு சுழற்சியில், மாதவிடாய் ரத்தத்தில் அசுத்தம் நிறைந்தது எது? என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×