என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்திருத்தங்களை மேற்கொள்வது அரசியல் ரீதியாக கடினம்: ரகுராம் ராஜன்
    X

    சீர்திருத்தங்களை மேற்கொள்வது அரசியல் ரீதியாக கடினம்: ரகுராம் ராஜன்

    ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்தியாவில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அரசியல் ரீதியாக கடினம் என்று தெரிவித்துள்ளார்.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற கருத்தரங்கில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டார். ”உலக பொருளாதாரத்தில் இந்தியா” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் ”பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பணவீக்கத்தை கட்டுப்படுத்தவம், வங்கிகளின் நிலைமை சீர் செய்வதும் அவசியமாகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பற்றாக்குறையால் ஏற்பட்ட வறட்சி, சர்வதேச சந்தையில் மந்தநிலை ஆகியவற்றுக்கு இடையிலும் இந்தியா 7 1/2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை செய்தால் வளர்ச்சி வேகம் பெறும், ஆனால் அதில் அரசியல் ரீதியாக சிரமம் உள்ளது.” என்று தெரிவித்தார்.
    Next Story
    ×