search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமமுக நிர்வாகி புகழேந்தி
    X
    அமமுக நிர்வாகி புகழேந்தி

    தங்க தமிழ்செல்வன் இனியாவது உண்மையாக இருக்கட்டும்- புகழேந்தி கருத்து

    அ.ம.மு.க.வில் இருந்து விலகி தங்கதமிழ் செல்வன் தி.மு.க.வில் சேர்ந்து இருப்பது பற்றி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க.வில் இருந்து விலகி தங்கதமிழ் செல்வன் தி.மு.க.வில் சேர்ந்து இருப்பது பற்றி அ.ம.மு.க. நிர்வாகி புகழேந்தி கூறியதாவது:-

    வியாழக்கிழமை (27.6.19) வரை தி.மு.க.வில் இணைவது என்று கூறப்படுவது வதந்தி என்றார். நேற்று இணைந்து இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே அம்மாவால் எம்.பி. ஆக்கப்பட்டு, எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டவர். இந்த இயக்கம் லட்சக்கணக்கான தொண்டர்கள் கொடிபிடித்து, வியர்வை சிந்தி வளர்த்த இயக்கம். இதுநாள் வரை இயக்கத்தில் இருந்து எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு, தன்னை வளர்த்த இயக்கத்துக்கு துரோகம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். இதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

    தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. எம்.ஜி.ஆர் இருக்கும் வரை 13 ஆண்டுகள் தோல்வி அலையில் நீந்தி வந்ததுதான் தி.மு.க.வும். வெற்றிபெறும்போது இயக்கத்தில் இருப்பதும் தோல்வி அடையும் போது இயக்கத்தை விட்டு வெளியேறியதன் மூலம் அவர் எவ்வளவு விசுவாசமாக இருந்து இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். தனி ஒருவராக சென்று இருக்கிறார். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. இனியாவது இரவு வேளையில் அவர் சார்ந்து இருக்கும் இயக்கத்தை பற்றி தவறாக பேசாமல் இருந்தால் நல்லது. அங்கேயாவது உண்மையாக, நேர்மையாக, நாணயமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-

    தங்கதமிழ்செல்வனுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழை திராவிடத்தை நேசிப்பவர்கள் தி.மு.க.வை தழுவ வேண்டியது காலத்தின் கட்டாயம். திராவிடத்தையும், அண்ணாவையும் இழந்து வெறுமனே நிற்கிறது அ.ம.மு.க. இந்த நேரத்தில் தங்கதமிழ்செல்வன் சமயோசிதமாக முடிவெடுத்துள்ளார்.

    அவர் தி.மு.க.வில் இணைந்து எந்த நெருடலும் இல்லை. கள அரசியலில் இருப்பவர்கள் ஓய்வெடுக்க முடியாது. அ.ம.மு.க. கொள்கை இல்லாத கட்சி அ.தி.மு.க. முடியப்போகிறது. அது பா.ஜனதாவின் கிளை கட்சிதான்.

    தங்கதமிழ்செல்வன் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. வாக இருந்தவர். தேனி அரசியலில் முக்கியமான இடத்தில் இருப்பார். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் கூறியதாவது:-

    வெற்றியில் பங்கு போட்டவர் தோல்வியில் வெளியேறியதன் மூலம் அவரது தரத்தை காட்டி இருக்கிறார். ஒரு இயக்கம் தோல்வி அடையும் போது அதற்கான காரணத்தை கண்டறிந்து வளர்க்க முயற்சிக்காமல் ஓடுவது அவரது கோழைத்தனமும், பச்சோந்திதனமும் தான்.

    தொகுதியை தாண்டி தெரியாதவரை தமிழகம் முழுவதும் தெரிய வைத்தது அ.ம.மு.க. இப்போது அவர் இழந்து நிற்பது மானம் மட்டுமல்ல அவரது வருங் காலத்தையும் தான். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×