என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராஜபாளையம் அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை
- அய்யனார் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- போலீசார் தேடிய போது மற்றொரு இடத்தில் உடல் கிடந்ததை கண்டுபிடித்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் பூவையா (வயது45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
பூவையா மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் மனைவியிடம் கூறிவிட்டு மாடுகளை மேய்ப்பதற்காக ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையே 2 நாட்களாகியும் பூவையா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி உறவினர்களை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் பூவையா குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பூவையாவை தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜபாளையத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு செல்லும் வழியில் முடங்கியார் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் வாலிபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு வாலிபரின் தலை மட்டும் கிடந்தது. மோப்ப நாய் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடிய போது மற்றொரு இடத்தில் உடல் கிடந்ததை கண்டுபிடித்தனர்.
தலை மற்றும் உடலை கைப்பற்றிய போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பூவையா என்றும், அவர் தான் அழைத்து சென்ற மாடுகளை அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் மேய விட்டதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் நில உரிமையாளரின் மகன்கள் 2 பேர் சேர்ந்து பூவையாவை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையுண்ட பூவையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக காவலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்