என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  டீ வியாபாரியை கத்தியால் வெட்டி கொள்ளை முயற்சி- வாலிபர் கைது
  X

  டீ வியாபாரியை கத்தியால் வெட்டி கொள்ளை முயற்சி- வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2 வாலிபர்கள் தனுசை வழிமறித்து கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர்.
  • தலையில் வெட்டுபட்டு படுகாயமடைந்த தனுஷ் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  போரூர்:

  நெற்குன்றம் முனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் தனுஷ் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருகிறார்.

  இவர் இரவு கோயம்பேடு மார்க்கெட் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் தனுசை வழிமறித்து கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர்.

  சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டதால் கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தலையில் வெட்டுபட்டு படுகாயமடைந்த தனுஷ் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரஜிஸ்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அதே பகுதியை சேர்ந்த துரைமுருகன் (25) என்பவரை கைது செய்தனர். அவனிடம் இருந்து பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது தப்பி ஓடிய அவனது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×