என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
  X

  குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் வழிமறித்து மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த பணத்தை பறித்து சென்றார்.
  • பணம் பறித்தவரை போலீசார் காவேரி நகர் பஸ் நிறுத்தம் அருகே கைது செய்தனர்.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் கார்த்தி(வயது29). காய்கறி மார்க்கெட் கூலி தொழிலாளி. மாற்றுத்திறனாளியான இவர் நேற்று மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கார்த்தியை வழிமறித்து மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ.450 யை பறித்து சென்றார். அக்கம் பக்கம் உள்ள வர்கள் அவரை பிடிக்க வந்த போது கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து கார்த்தி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.

  போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியிடம் பணம் பறித்த பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(30) என்பவரைகாவேரி நகர் பஸ் நிறுத்தம் அருகே கைது செய்தனர்.

  Next Story
  ×