search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் குளிர்பானத்தில் மாத்திரை கலந்து போதை பானமாக பயன்படுத்தும் அவலம் சுகாதாரத்துறை எச்சரிக்கை
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் குளிர்பானத்தில் மாத்திரை கலந்து போதை பானமாக பயன்படுத்தும் அவலம் சுகாதாரத்துறை எச்சரிக்கை

    • இருமலுக்கு பயன்படுத்தப்படும் டானிக்கை போதை மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.
    • இந்நிலையில் ரூ.10-க்கு விற்கப்படும் குளிர்பானத்தில் மாத்திரைகளை கலந்து குலுக்கி போதை பானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் புகையிலை, குட்கா, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் இதனை கடத்துபவர்கள், விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் போதைக்காக பல்வேறு மாற்று முறைகளை கையாண்டு வருகின்றனர். ஏற்கனவே இருமலுக்கு பயன்படுத்தப்படும் டானிக்கை போதை மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் ரூ.10-க்கு விற்கப்படும் குளிர்பானத்தில் மாத்திரைகளை கலந்து குலுக்கி போதை பானமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன்மொத்த அடக்கவிலையே ரூ.20-க்குள் வருவதால் இதனை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து சமூகஆர்வலர்கள் தெரிவிக்கையில், தமிழகத்தில் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்ககூடாது என்ற விதிஇருந்தும் இதனை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை. குறிப்பாக தலைவலி, காய்ச்சல், சளி போன்ற மாத்திரைகள் பெட்டிகடைகள் மற்றும் டீக்கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    எனவே இதுபோன்ற மாத்திரைகள் போதைக்காக பயன்படுத்தப்பட்டு இளைஞர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

    இதுகுறித்து திண்டுக்கல்மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவிக்கையில், குளிர்பானத்தில் மாத்திரை கலந்து போதைக்காக பயன்படுத்துவது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும். குடல்புண், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படுவதுடன் இருதயதுடிப்பையும் நிறுத்தும். கல்லீரல் பாதிக்கப்பட்டு நாளடைவில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே இளைஞர்கள் இவ்விசயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றார்.

    Next Story
    ×