என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேனியில் பைக் விபத்தில் வாலிபர் பலி
  X

  கோப்பு படம்

  தேனியில் பைக் விபத்தில் வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்டதில் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
  • விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  கூடலூர்:

  தேனி அல்லிநகரம் வள்ளிநகரை சேர்ந்தவர் சரவணராஜ் (வயது55). இவரது மகன் முத்துராஜ் (34). 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்டதில் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் காயம் அடைந்த 2 பேரும் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

  மேல்சிகிச்சைக்காக சரவணராஜ் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×