என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நீட் தேர்வுக்கு நேரம் ஒதுக்கி படித்தால் வெற்றி பெறலாம் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த மாணவர் பேட்டி
  X

  நீட் தேர்வுக்கு நேரம் ஒதுக்கி படித்தால் வெற்றி பெறலாம் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த மாணவர் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழக அளவில் நாமக்கல் கிரீன் பார்க் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவன் சுதர்சன் 720- க்கு 700 மதிப்பெண் பெற்று 3-ம் இடம் பிடித்தார்.
  • சின்ன வயதில் இருந்த டாக்டர் ஆக வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது நிறைவேறி உள்ளது.

  நாமக்கல்:

  நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.

  இதில் தமிழக அளவில் நாமக்கல் கிரீன் பார்க் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவன் சுதர்சன் 720- க்கு 700 மதிப்பெண் பெற்று 3-ம் இடம் பிடித்தார்.

  நீட் தேர்வில் மாநில அளவில் 3- ம் இடம் பிடித்த மாணவன் சுதர்சன் கூறியதாவது:-

  நீட் தேர்வில் 700 மதிப்பெண் பெற்றுள்ளேன். எனது தந்தை ராஜா வக்கீல் ஆவார். தாய் வாணி ஸ்ரீ பேராசிரியையாக உள்ளார். என தந்தை விபத்து தொடர்பான வழக்குகளை நடத்தி வருகிறார். இதனால் எனக்கு டாக்டர் படிக்க வேண்டும் என தோன்றியது. அது மட்டுமின்றி சின்ன வயதில் இருந்த டாக்டர் ஆக வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது நிறைவேறி உள்ளது.

  நீட் தேர்விற்கு தனியாக நேரம் ஒதுக்கி செயல்பட்டாலே முதல் முறையே வெற்றி பெறலாம். என்.சி.ஆர்.டி. யை பின்பற்றி படித்தால் வெற்றி பெற முடியும். விடுதியில் இரவு அதிக நேரம் படித்தேன். நண்பர்களுடன் படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. டாக்டராக படிக்க பெற்றோர், ஆசிரியர்கள் செய்யும் அர்ப்பணிப்பை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

  பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரில் சேர்ந்து டாக்டர் படிக்க ஆசை. எலும்பு தொடர்பாக சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×