என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏற்காட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
- சுமார் 25 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்களும் நாசமானது.
- இதனால் அந்த கிராம மக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் பல இடங்களில் மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்காட்டில் உள்ள மலை கிராமங்களான செந்திட்டு, அரங்கம், மாரமங்கலம், கேழையூர், பெலாக்காடு ஆகிய கிராமங்களில் சுமார் 25 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த சாமை,ராகி, நெல், தினை, போன்ற பயிர்கள் மழைநீரில் மூழ்கி அனைத்து பயிர்களும் நாசமானது. இதனால் அந்த கிராம மக்கள் வேதனை அடைந்து உள்ளனர். மேலும் தொடர் மழையால் மழை நீர் சாலையில் வெள்ளம் போல் ஓடியதால் பல கிராமங்களில் சாலைகள் மழைநீரால் அரித்து செல்லப்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து மழை வெள்ளம் பாதித்த இடங்களையும் பயிர்களை–யும் ஏற்காடு தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் புஷ்பராணி மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.