என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவையில் ஜாமீனில் வந்த 2 மாதத்தில் தொழிலாளி மீண்டும் கைது
  X

  கோவையில் ஜாமீனில் வந்த 2 மாதத்தில் தொழிலாளி மீண்டும் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொன்னுசாமிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
  • புகாரின் பேரில் பொன்னுசாமியை பெரியநாயக்கன் பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  கோவை:

  கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் கங்கா நகரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 65). இவரது மனைவி சென்னியம்மாள் (60). இவர்களது மகள் மகேஸ்வரி (31). இவரது கணவர் பொன்னுசாமி (36). கூலி தொழிலாளி.

  இந்த நிலையில் பொன்னுசாமிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த பொன்னுசாமி மீண்டும் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

  இதனை பார்த்த மாமியார் சென்னியம்மாள் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி, மாமியாரை சரமாரியாக தாக்கினார்.

  பின்னர் அங்கிருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டினார். இதுகுறித்து புகாரின் பேரில் பொன்னுசாமியை பெரியநாயக்கன் பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொன்னுசாமி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று பொன்னுசாமி மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு தனது மனைவி மகேஸ்வரியை தன்னுடன் வருமாறு கூறினார்.

  ஆனால் மகேஸ்வரி அவருடன் செல்ல மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி, மகேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த செங்கல்லை எடுத்து தாக்கினார்.

  பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். பலத்த காயம் அடைந்த மகேஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரியநாயக்கன் பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

  இதுகுறித்து வேலுசாமி பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மீண்டும் பொன்னுசாமியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×