search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களிடம் 13 பவுன் நகை பறிப்பு
    X

    பெண்களிடம் 13 பவுன் நகை பறிப்பு

    • திருமங்கம் அருகே நடந்த கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 13 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • விழாவில் பங்கேற்கும் பெண்கள் அதிக நகைகளை அணிந்து வர வேண்டாம் என போலீசாரும் அறிவுறுத்தியுள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே வன்னிவேலம்பட்டியில் உள்ள கோவில் கும்பாபி ஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆண்டிபட்டியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் (வயது 56) என்பவர் கும்பாபி ஷேகத்தை காண வந்திருந்தார் அவர் கூட்ட நெரிசலில் சாமி கும்பிட்ட போது மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு நைசாக தப்பினார்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் எஸ்‌. கல்லுப்பட்டி யை சேர்ந்த விஜயா என்ப வரிடமும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்தி ருந்த 3 பவுன் செயினை மர்ம நபர் திருடிக்தேடிக்கொண்டு தப்பினார்.

    டி.கல்லுப்பட்டியை சேர்ந்த தனலட்சுமி (60) கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார். இவரின் கவனத்தை திசை திருப்பிய மர்ம நபர் தனலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் நகையை அபேஸ் செய்து கொண்டு தப்பினார். பி.புதுரை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் 2 பவுன் நகையை திருடர்களிடம் பறி கொடுத்தார்.

    கோவில் கும்பாபிஷேகத்தை பயன்படுத்தி திருட்டு கும்பல் நான்கு பெண்களிடமும் 13 பவுன் நகையை பறித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தொடர்பாக டீ கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அண்மைக்காலமாக மதுரை மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் கூடும் முதியவர்கள், பெண்களை குறி வைத்து மர்ம நபர்கள் நகைகளை திருடி வருகின்றனர். எனவே போலீசார் இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொது விழாவில் பங்கேற்கும் பெண்கள் அதிக நகைகளை அணிந்து வர வேண்டாம் என போலீசாரும் அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×