என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் நகை பறிப்பு
  X

  ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இரண்டரை பவுன் தங்கச்சங்கிலியை 2 பெண்கள் சட்டென்று பறித்தனர்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

  தஞ்சாவூர்:

  அரித்துவாரமங்கலத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி இன்று காலை பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் அருகே பஸ் வந்தபோது பெண் பயணி ஒருவரின் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கச்சங்கிலியை 2 பெண்கள் சட்டென்று பறித்தனர்.

  இதனை அறிந்து அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட மற்ற பயணிகள் 2 பெண்களையும் பிடித்து பஸ்சில் இருந்து கீழே இறக்கினர். பின்னர் அவர்களை தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  இதையடுத்து அந்த பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை எம்.ஜி.ஆர் . நகரை சேர்ந்த மணிகண்டன் மனைவி தேவயானி (வயது 25 ) , அதே பகுதியை சேர்ந்த மாரி மனைவி முத்து (25 ) என்பது தெரியவந்தது.

  இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவயானி, முத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வேறு எங்காவது கைவரிசை காட்டி உள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×