என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
- ராதிகாவை வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
- மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வர உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு, காக்கம்பாடி அருகே உள்ள பில்லேரி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் ( வயது 30). இவரது மனைவி ராதிகா (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது அதைத் தொடர்ந்து ராம்குமார் மற்றும் உறவினர்கள் உடனடியாக ராதிகாவை வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வர உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவசரகால மருத்துவ ஊழியர் சிகாமணி மற்றும் டிரைவர் கமலக்கண்ணன் ஆகியோர் ராதிகாவை அழைத்துக்கொண்டு சேலத்திற்கு விரைந்து வந்து கொண்டிருந்தனர். சுக்கம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது ராதிகாவுக்கு பிரசவ வலி அதிகமானது. அதனால் வாகனத்தை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு மருத்துவ ஊழியர் சிகாமணி, ராதிகாவுக்கு சிகிச்சை மேற்கொண்டதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அதைத் தொடர்ந்து ராதிகாவும் அவரது குழந்தை யையும் பத்திரமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து ராதிகாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், சிகாமணி மற்றும் ஓட்டு நர் கமலக்கண்ணன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர்.