என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பரமத்தி அருகே விபத்து லாரி மீது கார் மோதி பெண் பலி
- சொகுசு காரில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.
- இந்த விபத்தில் காரில் வந்த ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பரமத்திவேலூர்:
மதுரை அருகே திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 60). இவரது மனைவி ஜெயந்தி (55). இவரது மகள் சரண்யா(36) மற்றும் வைத்தியலிங்கத்தின் அக்கா செண்பகம் (72). இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
சொகுசு காரில்
தற்போது இந்தியா வந்துள்ள இவர்கள், நேற்று சொகுசு காரில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே சென்று கொண்டிருந்தபோது, கரூர்- நாமக்கல் பை-பாஸ் சாலையின் சென்டர் மீடியனில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த, தண்ணீர் டேங்க் லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
பெண் பலி
இந்த விபத்தில் காரில் வந்த ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செண்பகம், வைத்தியலிங்கம், அவரது மகள் சரண்யா மற்றும் கார் டிரைவரான திண்டிவனத்தை சேர்ந்த செல்வக்குமார் (28) ஆகிய 4 பேரையும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.