search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் இன்று காலை நடந்தது: மத்திய அரசை கண்டித்து  தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    விழுப்புரத்தில் நடந்த தி.மு.க.ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    விழுப்புரத்தில் இன்று காலை நடந்தது: மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் இன்று காலை ஈடுப்பட்டனர்.
    • மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிடாகம் தினகரன் வரவேற்று பேசினார்.

    விழுப்புரம்:

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரம், முக்கிய நகரங்களில் இந்தி திணிப்பையும், ஒரே பொது நுழைவுத் தேர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞரணி, மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்ட த்திற்க்கு தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இளந்திரையன், அன்பு, ராஜவேல், பாலாஜி, கலைவாணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் அன்பழகன், ராஜ்குமார், லெனின்விஜய், ரங்கநாதன், குணசேகரன், சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிடாகம் தினகரன் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்கள் எழுப்பட்டன. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட அவைத் தலைவரும், மாவட்ட சேர்மனுமான ஜெயச்சந்திரன், மாவட்ட கழக பொருளாளர் ஜனகராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அன்னீயூர் சிவா, மாவட்ட துணைச்செயலாளர்கள் புஷ்பராஜ், முருகன், கற்பகம், விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை, விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி சக்கரை ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், அப்துல் சலாம், பாஸ்கரன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கபாலி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தங்கம், மும்மூர்த்தி, கல்பட்டு ராஜா, தெய்வசிகாமணி, வேம்பி ரவி, ஜெய ரவிதுரை, முருகவேல், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் செந்தில்கு மார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத் நன்றி உரையாற்றினார்.

    Next Story
    ×