என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணிக்கு வரவேற்பு
  X

  விழிப்புணர்வு பேரணி செங்கோட்டைக்கு வந்த போது எடுத்தப்படம்.


  செங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணிக்கு வரவேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகளுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையின் சேவைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது
  • மதுரை கோட்டத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள் சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி இறுதியாக புதுடெல்லியில் நிறைவடைகிறது.

  செங்கோட்டை:

  நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே பாதுகாப்பு படையின் பொது மேலாளா் ஈஸ்வரதாஸ் உத்தரவின்படி தென்னகத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்பு படையின் சேவைகள் குறித்த விழிப்புணா்வு மோட்டார் சைக்கிள் மற்றும் காணொலி காட்சி விழிப்புணா்வு பிரசார வாகன பேரணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

  நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ரெயில்வே பாதுகாப்பு படையின் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை ஆய்வாளா் ஜார்ஜ்முல்லா், தலைமை காவலா் ஆறுமுகபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தலைமைக்காவலா் காவூர்சாமி வரவேற்று பேசினார்.

  அதனைத்தொடா்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையின் சேவைகள் குறித்த பிரசார விழிப்புணா்வு மோட்டார்சைக்கிள் மற்றும் விழிப்புணா்வு காணொலி காட்சி பிரசார வாகனம் மூலம் பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகளுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையின் சேவைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

  இந்த மோட்டார்சைக்கிள் விழிப்புணா்வு பிரசார பயணத்தில் 6 பைக்குகளில் 15 பேர் மற்றும் காணொலி காட்சி பிரசார வாகனத்தில் 3 பேர் அடங்கிய குழுவினர் மதுரையிலிருந்து புறப்பட்டு மதுரை கோட்டத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள் சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி இறுதியாக புதுடெல்லியில் நிறைவடைகிறது.

  செங்கோட்டைக்கு வந்த பேரணிக்கு செங்கோட்டை ரெயில்வே பாதுகாப்பு படையின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தென்காசி ரெயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  Next Story
  ×