என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மத்திய அரசு கொண்டுவந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையை வரவேற்கிறோம்
  X

  சேலம் உத்தம சோழபுரம் பகுதியில் திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலந்து நுரையுடன் செல்வதை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  மத்திய அரசு கொண்டுவந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையை வரவேற்கிறோம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் உத்தமசோழ புரம்திருமணி முத்தாறு அருகே அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.
  • கூடுதல் அதிகாரிகளை நியமித்து கழிவு கலப்பதை கண்காணித்து தடுப்பதோடு, அதற்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

  சேலம்:

  சேலம் உத்தமசோழ புரம்திருமணி முத்தாறு அருகே அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

  தமிழகத்தில் ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி திருமணி முத்தாற்றை பார்த்தபோது வேதனையாக உள்ளது. மாநகராட்சி கழிவுநீர், சாயக்கழிவு கலப்பதால் திருமணிமுத்தாறு மாசடைந்து அதில் ஆக்சிஜன் குறைந்துவிட்டதால், எந்த உயிரினமும் வாழ முடியாது.கரையோர மக்களும் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது.

  சேலத்தில் ரூ.530 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை 530 கோடி திட்ட பணி நடக்கிறது. திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க, இன்னும், 2 ஆண்டாகும். அவை முழுமையாக சுத்தப்ப டுத்தப்படும். கூடுதல் அதிகாரிகளை நியமித்து கழிவு கலப்பதை கண்காணித்து தடுப்பதோடு, அதற்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

  சாய கழிவு மாநகராட்சி கழிவு, திருமணிமுத்தாறில் கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போன்றது. அதை நிரந்தரமாக தடுத்து நிறுத்தப்படும். தமிழகத்தில், 10 ஆண்டில் 143 கிடங்கில் குப்பை அதிகமாகிவிட்டது. தற்போது பிளாஸ்டிக் அரசு, மத்தியபொருட்களுக்கு தடை விதித்துள்ளதை வரவேற்கிறோம்.

  இதன்மூலம் வெளி மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் வருவது தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

  அவருடன் கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேயர் ராமசந்திரன், துணை மேயர் சாரதாதேவி, ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் உடனிந்தனர்.

  Next Story
  ×