search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகை அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு குறைப்பு
    X

    கோப்பு படம்.

    வைகை அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு குறைப்பு

    • வைகை அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது
    • கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டம் 70 அடியில் நீடித்து வருகிறது

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. வைகை அணை ஏற்கனவே முழு கொள்ள ளவை எட்டி விட்ட நிலையில் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக மீண்டும் 70 அடியை தாண்டியது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக வைகை அணையில் இருந்து 4800 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 70.01 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3736 கன அடி நீர் வருகிறது.

    நேற்று 4800 கன அடி வரை திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 2293 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5829 மி.கன அடியாக உள்ளது.

    இதே போல் தொடர் மழை காரணமாக நேற்று 136.40 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை 136.60 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 2313 கன அடி. நேற்று 933 கன அடி நீர் திறக்கப்பட்டு 2 ெ ஜனரேட்டர்களில் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. இன்று காலை முதல் மீண்டும் 1866 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள தால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படு கிறது. நீர் இருப்பு 6269 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் உபரி நீர்வெளியேற்றப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு 491 கன அடி நீர் வருகிறது. நீர் இருப்பு 435.32 மி.கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.54 அடியில் உள்ளது. வரத்து 57 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    தொடர் மழை காரண மாக சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரிப்பால் இன்று 32-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டு ள்ளது. இதே போல் கும்பக்கரை அருவியிலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 5.2, தேக்கடி 1.8, கூடலூர் 4.8, உத்தமபாளைம் 4.6, வைகை அணை 2.6, சோத்துப்பாறை 11, ஆண்டிபட்டி 7.2, அரண்மனைபுதூர் 20, போடி 5.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×