என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
  X

  கோப்பு படம்

  முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த 1ம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது
  • இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 600 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது

  கூடலூர்:

  பருவமழை தாமதமாகி வரும் நிலையில் முல்லை ப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல்சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர் மட்டம் சீராக குறைந்து இன்று காலை நிலவரப்படி 129.75 அடியாக உள்ளது.

  சாரல் மழை மட்டும் பெய்து வருவதால் குறைந்த அளவே நீர் வரத்து உள்ளது. மழை ஏமாற்றி வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி யுள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதத்தில் பெய்யும் பருவ மழையால் கேரளாவில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.

  இதனால் முல்லைப்பெரி யாறு அணை நீர் மட்டம் உயர்ந்து நீர் திறப்பும் அதிகரிக்கும். தற்போது மழை குறைந்த நிலையிலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று 500 கன அடியாக இருந்த நீர் திறப்பு இன்று காலை முதல் 600 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பாசனத்துக்கு 500 கன அடியும், குடிநீருக்காக 100 கன அடியுமாக பிரிக்கப்பட்டுள்ளது.

  வைகை அணையின் நீர் மட்டம் 54.99 அடியாக குறைந்துள்ளது. 356 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.40 அடியாக உள்ளது. 76 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 84.45 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

  பெரியாறு 4.8, தேக்கடி 4.4, சோத்துப்பாறை 2, பெரியாறு 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

  Next Story
  ×