search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் தேவைக்காக ராமநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்-பஞ்சாயத்து கூட்டமைப்பு கோரிக்கை
    X

    சிற்றாறு வடிநில கோட்ட பொறியாளரிடம் கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் மனு கொடுத்த காட்சி.


    குடிநீர் தேவைக்காக ராமநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்-பஞ்சாயத்து கூட்டமைப்பு கோரிக்கை

    • ஆற்றுப்படுகைகள் வறண்டு காணப்படுவதால் உறை கிணறுகளில் குடிநீர் குறைந்து காணப்படுகிறது.
    • இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.


    கடையம்:

    கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் , பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக சிற்றாறு வடிநில கோட்ட செயற்பொறியாளரிடம் நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையம், கீழக்கடையம், கடையம் பெரும்பத்து, சேர்வை காரன்பட்டி, தெற்கு மடத்தூர் உள்பட பல பஞ்சாயத்து களுக்கு ராமநதி மற்றும் ஜம்பு நதி நீர்தேக்க உறை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. இந்த நிலையில் தற்போது கோடையால் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

    ஆற்றுப்படுகைகள் வறண்டு காணப்படுவதால் உறை கிணறுகளில் குடிநீர் குறைந்து காணப்படுகிறது. எனவே இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில், ராமநதி அணையிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் இப்பகுதி பொதுமக்கள் பயன்பெறுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×