search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் மங்களாம்பிகை சமேத  கிருபாபுரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்ட காட்சி.

    திருவெண்ணைநல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

    • திருவெண்ணெய்நல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்றது மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் ஆலயம்
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரை தடுத்தாட்கொண்டு அருளாசி வழங்கிய மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    கிபி 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் நடு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் 14-வது தலம் ஆகும். தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்த இக்கோவில் அம்பிகை வெண்ணையால் கோட்டை கட்டி வழிபட்ட சிறப்புமிக்க தலமாகும். சிவ பெருமானுக்கும் சுந்தரருக்கும் வழக்கு நடந்த தலமாகும் பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா என பாடல் பெற்ற தலமாகும் இக்கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேக செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இதுவரை கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாததால் புதியதாக. 7 நிலை ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டு கலசங்கள்பொருத்தப்பட்டு கோவில் புனரமைக்கப்பட்டடு இன்று காலை 10.30. மணிக்கு மேல் 11 30. மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கடந்த 4ந்தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து கஜ பூஜை கோ பூஜை நவக்கிரக சாந்தி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகளும் நடைபெற்றது. 5 தேதி யாகசாலை அலங்காரம் ஆறாம் தேதி கன்யா பூஜை சுமங்கலி பூஜை 7ந்தேதி விசேஷ சாந்தி பூர்ணாஹூதி தீபாராதனை, 8 ம் தேதி காலை 4 வது கால யாக பூஜை 10 மணிக்கு பரிவார சன்னதிகள் கும்பாபிஷேகம் 4வது கால யாக வேள்வி மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றன. இன்று காலை மங்கல இசை,ஆறாவது கால யாகபூஜை மகா பூர்ணாஹூதி பிரதான கலசம் ஆலயம் வலம் வருதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று அர்த்தநாரீ சிவாச்சாரியார் தலைமையில் சாம்பமூர்த்தி குருக்கள் சுந்தரமூர்த்தி குருக்கள் இன்று காலை 10.30 மணி முதல் 11. 30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

    சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை தகர் சிவப்பிரகாசம் செயல் அலுவலர் சூரியநாராயணன் மற்றும் விழாக்குழுவினர் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, விழுப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான ஆயிரத் குக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×