search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமுளி மலைச்சாலையில் மண்சரிவால் வாகன ஓட்டிகள் அச்சம்
    X

    குமுளி மலைச்சாலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவை படத்தில் காணலாம்.

    குமுளி மலைச்சாலையில் மண்சரிவால் வாகன ஓட்டிகள் அச்சம்

    • மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப் பாதையில் இரைச்சல் பாலம் அருகே கொண்டைஊசி வளைவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ேலாயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே கொண்டைஊசி வளைவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கூடலூர் நகராட்சி 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கி.மீ பாதை குறுகலான மலைச்சாலையாகும்.

    இந்த சாலையில் அதிக ளவு வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த சாலை அதிகவாகன ங்கள் பயன்பாடு காரணமாக வும், தொடர்மழை காரணமாக வும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,

    மலைச்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மலை ச்சாலையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்ப ட்டுள்ளது.

    தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் அதனை சீரமைத்து வாகனங்கள் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகன ங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    தொடர் மழை கார ணமாக தேக்கடி படகு த்துறை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு படகு போக்குவரத்து மட்டுமின்றி ஜீப், யானை சவாரி, பசுமைநடை போன்ற பல்வேறு சுற்றுலா பயணிகளை கவரும் பொழுதுபோக்கு அம்ச ங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரண மாக பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருைக தருவார்கள்.

    இவர்களுக்காக தற்காப்பு கலையான களரி, கதக்களி நடனம் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஆனால் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துள்ளது. எனவே ஓட்டல்கள், ரிசாட்டுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    கேரளாவில் பெய்துவரும் தொடர்மழை இப்பகுதி யிலும் தொடர்ந்து நிலவுவ தால் தினசரி ரூ.10லட்சம் வரை வருவாய்இழப்பு ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி வியாபாரிகள் தெரிவித்து ள்ளனர்.

    Next Story
    ×