search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.

    வேதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

    • ஊராட்சிகோட்டை மலை வேதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.
    • 2 மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே உள்ள ஊராட்சிகோட்டை மலையில் வேதநாயகி-வேதகிரீஸ்வரர், ஸ்ரீ தேவி பூதேவி-வரதராஜ பெருமாள்ய மற்றும் வேதவியாசர்- வேத நாராயண சுவாமி ஆகிய கோவில்கள் உள்ளன.

    இக்கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து 17-ந் தேதி மகா கணபதி ஹோமம், முதலாம் கால யாக பூஜைகளும், நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    நேற்று அதிகாலை 4-ம் கால பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, கபூர் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் பவானி மற்றும் குமாரபாளையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×