search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவை பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    குறுவை நெல் வயல்களில் உரமிடும் தொழிலாளர்கள்.

    குறுவை பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

    • குறுவை பயிரிடப்படாத விவசாயிகளும் கூட சில அதிகாரிகளின் துணையுடன் தொகுப்பு திட்ட பயன்களை பெற முடிவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
    • உரங்கள் தட்டுப்பாடு நிலவிய போதிலும் விவசாயிகள் விலை அதிகம் கொடுத்து உரங்களை வாங்கி குறுவை பயிருக்கு இட்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    தமிழக காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்குமுன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. குறுவை சாகுபடி ஊக்கப்ப டுத்தும் விதமாக தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து, விதைநெல், உரங்கள் ஆகியவற்றை வழங்கியது. குறுவை தொகுப்பு திட்ட த்தில் குறுவை சாகுபடி செய்த அனைத்துவிவசாயி களுக்கும் என்றுஅறிவி க்காமல் அதில் கட்டுப்பா டுகள் விதிக்க ப்பட்டு உள்ளது ஏற்புடையதாக இல்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதைப்போல குறுவை பயிரிடப்படாத விவசாயிகளும் கூட சில அதிகாரிகளின் துணையுடன் தொகுப்பு திட்ட பயன்களை பெற முடிவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வேளாண் துறை நிர்ணயித்த இலக்கை தாண்டி இது வரை 4லட்சத்து17ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெற்று உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறுவை சாகுபடி பணிகளில்ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆங்கா ங்கே யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு நிலவிய போதிலும், விவசாயிகள் தட்டு தடுமாறி விலை அதிகம் கொடுத்து உரங்களை வாங்கி குறுவை பயிருக்கு இட்டு வருகின்றனர்.

    இதுபோன்ற சூழ்நி லையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தஞ்சை மாவட்டத்தின் பூதலூர் தாலுகா பகுதியில் ஒரேநாளில் கொட்டி தீர்த்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் நீரில் மூழ்கின.நீரில் மூழ்கிய பயிர்கள் இளம் பயிர்களாக இருந்ததால் உடனடியாக அழுகிப் போகக் கூடிய சூழ்நிலை உருவானது. இந்த பயிர்களை மீட்டு கொண்டு வருவது மிகவும் சிரமமான காரியம் என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர். மழையில் மூழ்கிய பயிர்களை மீட்க கூடுதலாக உரம் போட வேண்டிய நிலைமையிலும் விவசாயிகள் உள்ளனர்.

    கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் இன்சூ ரன்ஸ் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை பயிருக்கு பயிர் இன்சூரன்ஸ் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.மத்திய அரசு, மாநில அரசு, விவசாயிகள் ஆகிய முத்தரப்பு செலுத்த வேண்டிய தொகை குறித்த முரண்பாட்டினால் தமிழகத்திற்கு பயிர் இன்சூரன்ஸ் கடந்த ஆண்டு கிடைக்காமல் போனது.

    பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர காலக்கெடு ஜூலை 31ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளது. கடைசி தேதிக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. குறுவை இன்சூரன்ஸ் திட்டம் குறித்து இதுவரை தமிழக அரசிடம் இருந்து சாதகமான அறிவிப்பு வராதது குறித்து விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். திடீரென மாறி வரும் பருவச் சூழலில் எந்த நேரத்தில் மழை வரும், பூச்சி தாக்குதல் ஏற்படும் என்று புரியாத நிலையில், இன்சூரன்ஸ் ஓரளவுக்கு காப்பாற்றும் என்று எண்ணிக்கொண்டு உள்ளனர். இனியும் காலம் தாழ்த்தாது டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை அறிவித்து, அதற்கான இன்சூரன்ஸ் பிரீமிய தொகையை கட்டும் தேதியையும் நீட்டித்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறு த்துகின்றனர்.

    Next Story
    ×