search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசி  சந்தையில் பயன்படுத்தாத உள்புற கடைகளை   வியாபாரிகளுக்கு பிரித்து வழங்க கோரிக்கை
    X

    காேப்புபடம்

    அவிநாசி சந்தையில் பயன்படுத்தாத உள்புற கடைகளை வியாபாரிகளுக்கு பிரித்து வழங்க கோரிக்கை

    • அவிநாசி கைகாட்டிப்புதூா் ஈரோடு நெடுஞ்சாலை அருகே புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது.
    • சந்தை வளாகத்துக்குள் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

    அவினாசி :

    அவிநாசி வாரச் சந்தை சாலையோர கடைகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறை தடுக்க, பயன்படுத்தாத உள்புறக் கடைகளை வியாபாரிகளுக்கு பிரித்து வழங்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து அவிநாசி தனியார் அறக்கட்டளை நிா்வாகி ரவிகுமாா் கூறியதாவது:-

    அவிநாசி கைகாட்டிப்புதூா் ஈரோடு நெடுஞ்சாலை அருகே புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. இதில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள், வெளி மாநிலத்தவா்கள் கூடுகின்றனா். சந்தையின் வெளியே இருபுறமும் அமைக்கப்படும் கடைகளால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வந்ததால், அவிநாசி காவல் துறை, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தடுப்பு அமைத்து சந்தையின் உள்புறமாக கடைகள் அமைக்க அறிவுறுத்தி உள்ளனா். இருப்பினும் இதற்கு நிரந்தரத் தீா்வாக வாரச் சந்தை வளாகத்தில், பல காலமாக பயன்படுத்தாமல் உள்ள கான்கிரீட் கடைகளை வியாபாரிகளுக்கு பிரித்து வழங்கி கடைகள் அமைக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் சந்தையில் வழிப்பாதை கடைகள் அனைத்தையும் முறைபடுத்த வேண்டும். சந்தை வளாகத்துக்குள் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

    Next Story
    ×