என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்
  X

  கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவர் மீது மனைவி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்
  • கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

  திருச்சி:

  திருச்சி காஜாமலை ஜெ. ஜெ.நகர் செம்பருத்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் டோமினிக் சேவியர். இவருக்கும் கரோலின் ரீனா (வயது 38) என்பவருக்கும் கடந்த 2007 ல் திருமணம் நடைபெற்றது.இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கரோலின் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 2017ல் டோமினிக் சேவியர் தனது மகளுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். பின்னர் 5 ஆண்டுகள் கழித்து கடந்த 3ம் தேதி அவர் திருச்சி திரும்பியதாக கூறப்படுகிறது.

  இதனை அறிந்த கரோலின் கணவர் வீட்டுக்கு சென்றார்.

  பின்னர் திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த 80 பவுன் நகைகளை அவர் திரும்ப கேட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த டோமினிக் சேவியர் மற்றும் அவரது தந்தை ஜான் போஸ்கோ, தாய் அமளி ஆகியோர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட கரோலின் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

  இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் வழக்கு தொடர்பாக காந்தி மார்க்கெட் உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி புலன் விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×