என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்
- திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்தது
- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருச்சி:
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டம் இன்று மாமன்ற அரங்கில் நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா முன்னிலை வைத்தார்.
இதில் மின் கட்டண உயர்வு குறித்து பேச அனுமதி மறுத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் அரவிந்தன் தலைமையில் கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அனுசியா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர் அரவிந்தன், அம்பிகாபதி ஆகியோர் கூறும் பொழுது கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மாநகராட்சி சார்பில் சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியது.
தற்பொழுது மேலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த மின் கட்டணத்தை உயர்த்தியது குறித்து மாமன்ற கூட்டத்தில் பேச முயன்ற போது திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து பேச விடாமல் தடுத்தனர். மாமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேசத்தான் கவுன்சிலர்கள் உள்ளனர். அப்படி இருக்கும் பொழுது திமுக கவுன்சிலர்கள் மக்கள் பிரச்சனையை பேசவிடாமல் தடுப்பது ஏன்?
திருச்சி மாநகராட்சியில் அதிமுகவின் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மின்கட்டணம் உயர்வு குறித்து சட்டசபையில் தான் பேச வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் கூறுகிறார்கள். திருச்சி மாநகராட்சி எல்லை பகுதியில் வசிக்கும் மக்கள் மின் கட்டணம் கட்டவில்லையா? புதிய மின் இணைப்பு பெற வில்லையா? இவர்கள் பாதிப்பு அடைய வில்லையா? இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ஜவகர் பேசும் போது, ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் கே.என். நேருவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் காமராஜர் வளைவினை சாலை விரிவாக்கத்தின் போது அகற்றினர். அதனை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் ராமதாஸ் பேசும்போது,
முன்பு போலவே வார்டுக்குள் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரவில்லை.
மதிவாணன்( திமுக) திருவரம்பூர் பகுதியில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் பன்றி காய்ச்சல் டெங்கு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வரும் அபாயம் உள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஞ்சுளா தேவி கருமண்டபம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது அதேபோன்று சாலைகளும் சீரமைக்கப்படாமல் உள்ளன.அதனை நிறைவேற்ற வேண்டும்.
சுஜாதா (காங்கிரஸ்)
ஓயாமரி சுடுகாடு கொட்டகை ஒழுகுகிறது. காரியங்கள் செய்வதற்கு உள்ள அறை பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனை உடனடியாக பராமரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிக் பாஷா (திமுக)
எங்கள் வார்டுக்கு கூடுதல் லைட்டுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 40 வால்ட்டேஜ் ஆக உயர்த்த வேண்டும். அது மட்டுமல்லாமல் சிங்காரத்தோப்பு பகுதியில் ஹைமாஸ் லைட் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக கவுன்சிலர் செந்தில்
நீங்கள் 65 வார்டுகளுக்கும் தானே தந்தை. அப்படி என்றால் 65 வார்டுகளுக்கும் நிதியை சமமாக பிரித்து வழங்குவது தானே நியாயம் என்றார்.
அவர் புலவர் போன்று பேசியதால் அவையில் சிரிப்பதை எழுந்தது. அப்போது, மேயர் மாநகராட்சி நிதியை பிரித்து கேட்கிறீர்களா? அல்லது என் சொத்தை பிரித்து கேட்கிறீர்களா என்றார். அப்போது காஜாமலை விஜய் எழுந்து,.
நமக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தாலும் ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைக்க முடியாது. ஒவ்வொருவராக தான் நடத்த வேண்டும்.
திமுக கவுன்சிலர் லீலா எழுந்து திமுக தான் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் நிதியை சமமாக பிரித்து வழங்க வேண்டும் என்றார்.அதற்கு மேயர் 65 வார்டுகளுக்கும் தல 50 லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ஹைவே உள்ளிட்ட பகுதிகள் வருவதால் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
கூட்டத்தில் பேச வேண்டியதை சபையில் பேசக்கூடாது என்றார்.
லீலாவின் பேச்சுக்கு முத்துச்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே மதிவாணன் எழுந்து நிதி ஒதுக்கீடு சீராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. கவுன்சிலர் கலைச்செல்வி பேசும்போது தூய்மை பணிக்கு டாட்டா ஏசி வாகனம் வேண்டும் என்று கேட்டு இதுவரை தரவில்லை என்றார். திமுக கவுன்சிலர் கமல் முஸ்தபா உய்யக்கொண்டான் வாய்க்காலில் உள்ள ஆயகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால். அப்போது மேயர் இரண்டு நாட்களில் ஆகாய தாமரையை இரண்டு நாட்களில் ஆகாய தாமரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பைஸ் அகமது கூறும் போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர் பற்றாக்குறை இருப்பதாக குறிப்பிட்டார்.
அனைத்து கட்சி கவுன்சிலர்களும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்