என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 19). திருச்சி ஈ.வெ.ரா., கல்லூரியில் முதலாம் ஆண்டு விலங்கியல் படித்து வந்தார்.
- நீச்சல் தெரியாத லோகநாதன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.
திருச்சி :
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 19). திருச்சி ஈ.வெ.ரா., கல்லூரியில் முதலாம் ஆண்டு விலங்கியல் படித்து வந்தார். நேற்று மாலை இவர் தனது அண்ணன் லட்சுமணபெருமாள் மற்றும் நண்பர்கள் இருவருடன் அதே பகுதியில் உள்ள பொன்னுச்சாமி என்பவரது தோட்டத்தில் உள்ள பாசன கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்.
நீச்சல் தெரியாத லோகநாதன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். கிணற்றின் ஆழம் 70 அடி என்பதாலும் கிணற்றில் 60 அடி தண்ணீர் நிறைந்திருந்ததாலும் உடனடியாக லோகநாதனை மீட்க முடியவில்லை.
இதுகுறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும் நீரில் மூழ்கியவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி லோகநாதனை மீட்க முடிவு செய்து மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நீரில் மூழ்கி இறந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் காளை என்பவரை வரவழைத்த பின் அவர் நீரில் மூழ்கி இறந்தவரின் உடலை மீட்டார்.
இதையடுத்து இறந்தவரின் உடலை புத்தானத்தம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக மணப்பாறை வட்டாட்சியர் கீதாராணி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.