என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சிறப்பு ரெயிலில் ஆன்மீக சுற்றுலா வந்த 67 வயது பயணி பாதியில் இறந்த சோகம்
- ஆன்மீக சுற்றுலாவாக குஜராத்தை சேர்ந்த மொபட்லால் சிவராம் பாய் (வயது 67) என்பவர் தனது உறவினர்களுடன் வந்தார்.
- திருச்சி ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் சுவாமியை தரிசிப்பதற்காக திருச்சி ஜங்ஷன் ெரயில் நிலையம் வந்தனர்.
திருச்சி,
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 960 சுற்றுலா பயணிகள் பேக்கேஜ் அடிப்படையில் அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ெரயிலில் ஆன்மீக சுற்றுலாவாக புறப்பட்டனர். இதில் குஜராத்தை சேர்ந்த மொபட்லால் சிவராம் பாய் (வயது 67) என்பவரும் தனது உறவினர்களுடன் வந்தார்.
இதில் பெரும்பாலும் 60 வயதை கடந்தவர்கள் அதிகமாக எண்ணிக்கையில் இருந்தனர். சென்னை காஞ்சிபுரத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தரினத்ததை முடித்துக்கொண்ட அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் சுவாமியை தரிசிப்பதற்காக திருச்சி ஜங்ஷன் ெரயில் நிலையம் வந்தனர். பின்னர் அந்த சிறப்பு ெரயில் பெட்டி சுத்தம் செய்யும் யார்டில் நிறுத்தப்பட்டது.
அப்போது மொபட்லால் மட்டும் வெகு நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. சக பயணிகள் அவரை தட்டி எழுப்பும் என்றபோது எந்த பேச்சு மூச்சும் இல்லாமல் இருந்தார். அதன் பின்னர் ெரயில்வே டாக்டர் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து திருச்சி ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குஜராத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கும் இதுதொடர்பாக தகவல் அளித்துள்ளனர். ஆன்மீக சுற்றுலா வந்தவர் நிறைவடையும் முன்னரே மரணம் அடைந்தது அவருடன் வந்தவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.