என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழிபறியில் ஈடுபட்ட ரவுடி கைது
- வழிபறியில் ஈடுபட்ட ரவுடி கைது செய்யப்பட்டார்
- 500 பணத்தை பறித்துக் கொண்டு ஓடினார்
திருச்சி:
திருச்சியை அடுத்த மணப்பாறை லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 58). இவர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் டவுன் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த காந்தி மார்க்கெட் சவுராஷ்டிரா தெருவை சேர்ந்த வசந்தகுமார் (30) என்பவர் கத்தியை காட்டி விரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 500 பணத்தை பறித்துக் கொண்டு ஓடினார். இதுகுறித்து ராஜா மணி கன்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்துக்கிடமாக அந்த பகுதியில் சுற்றித்திரிந்த வசந்தகுமாரை கைது செய்தனர்.
Next Story