என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா
- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
- மாநகராட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
திருச்சி,
திருச்சி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கடைபிடிக்கும் விதமாக, மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று கே.கே. நகர் உடையான்பட்டி ெரயில்வே கேட் அருகில் உள்ள ரிவேரா தெரு மற்றும் ஆற்றுக் கரை பகுதிகளில் திருச்சி மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து புங்கன் மரம், வாகை மரம், நவால்மரம், வேம்பு, பூவரவு, வாதா மரம் உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர் .விழாவில் மண்டலத் தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் சண்முகம், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் மலர்விழி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இது போன்ற மரம் நடும் நிகழ்வுகள் ஒவ்வொரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார் .