search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

    • திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீர் உந்துமையம் அமைக்கும் பட்சத்தில் இங்கு வசிக்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் என அனைவரும் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படும்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட பசுமை நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளுக்கு மத்தியில் பூங்கா அமைப்பதற்கு என மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடத்தில் அதிக துர்நாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீர் உந்து மையம் அமைக்க மாநகராட்சி திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் என்றும், ஏற்கனவே அமைக்கப்பட்ட குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்திலிருந்து வெளியாகும் வண்டுகள் மற்றும் பூச்சிகள் மற்றும் துர்நாற்றத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இந்தநிலையில் தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீர் உந்துமையம் அமைக்கும் பட்சத்தில் இங்கு வசிக்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் என அனைவரும் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.

    எனவே இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதுக்கோட்டை சாலையில் இருந்து பல்வேறு சிற்றூர்களுக்கு செல்லும் புதுத்தெரு சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக கூறி அழைத்துச் சென்றதன்பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

    மீண்டும் சுத்திகரிப்பு மையம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.


    Next Story
    ×