search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாப்பாடு கூட தராமல் தவிக்கவிட்ட மகன்கள் மீது  நடவடிக்ைக கோரி கலெக்டரிடம் மனு
    X

    சாப்பாடு கூட தராமல் தவிக்கவிட்ட மகன்கள் மீது நடவடிக்ைக கோரி கலெக்டரிடம் மனு

    • சாப்பாடு கூட தராமல் தவிக்கவிட்ட மகன்கள் மீது நடவடிக்ைக கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • மருத்துவ செலவிற்கு கூட பணம் தருவதில்லை.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி அருகேயுள்ள அருவாக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகேசன் (வயது 86), சின்னம்மாள் (80) தம்பதியினர். இவர்கள் இருவரும் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்து கண்ணீருடன் அமர்ந்திருந்தனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு நான் வாலிப வயதில் இருந்தே கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் வாங்கிய நிலங்களை சரிபாதியாக பிரித்துக் கொடுத்தேன். மகன்கள் தந்தையையும், தாயையும் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பி அவர்களுக்கு நிலத்தை எழுதி கொடுத்தேன்.

    ஆனால் அவர்கள் நயவஞ்சமாக நிலத்தை வாங்கி விட்டு என்னையும், என் மனைவியையும் கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டார்கள். இதனால் உணவு அருந்துவதற்கு கூட வழி இல்லாத நிலை உருவாகியுள்ளது.

    மருத்துவ செலவிற்கு கூட யாரும் பணம் தந்து உதவவில்லை. அவர்களிடமிருந்து எங்களுக்குரிய நிலத்தை மீட்டுத் தருமாறு இன்று திருச்சி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருக்கிறோம் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

    இது போன்ற தகவல்களை அறியும் பொழுது எவ்வளவு தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சாதகமாக செய்தாலும் ஒரு கட்டத்தில் பெற்றோர்களை தவிக்க விட்டு செல்கிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்கள் பலர் கூறிச்சென்றதை பார்க்க முடிந்தது.

    Next Story
    ×