search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா விதிகளை கடைபிடிக்காவிட்டால் அபராதம்-கலெக்டர் எச்சரிக்கை
    X

    கொரோனா விதிகளை கடைபிடிக்காவிட்டால் அபராதம்-கலெக்டர் எச்சரிக்கை

    • திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • சமூக இடைவெளிகளை கடைபிடிக்காத பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

    திருச்சி:

    திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது தங்களின் குறைகளை திருச்சி மாவட்டம் மக்கள் மனுவாக எழுதிக் கொண்டு வந்து கலெக்டரிடம் கொடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இதில் பங்கேற்ற பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமலும் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த கலெக்டர் மா.பிரதீப் குமார் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களிடம் திடீரென உள்ளே இருந்து வெளியே வந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் குழந்தை ஒன்றுக்கு தாமாக முகக்கவசத்தை முகத்தில் அணிய வைத்தார்.

    அதனை தொடர்ந்து சமூக இடைவெளிகளை கடைபிடிக்காத பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    திருச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் லேசாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேவையான அளவிற்கு ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் இருக்கிறது. அதனால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்.

    தற்போது பொதுமக்கள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளிகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அதனை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்காவிட்டால் அபராதம் விதிப்பு தீவிரப்படுத்தப்படும்.

    ஆடி மாதம் வந்து கொண்டிருப்பதால் கோவில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெறும் காலமாகும். ஆகவே அரசு வழிகாட்டுதலின் பேரில் கோவில் திருவிழாக்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விழாக்களில் கூட்டம் கூடுகின்ற பொழுது சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

    தனியார் நிறுவனங்கள் வேலை செய்யும் ஊழியர்களை சானிடைசர் பயன்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிந்து வர கட்டாயப்படுத்துங்கள்.

    முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருக்கிறது. அதை செலுத்துவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×