என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்
  X

  மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடந்தது
  • அப்துல் சமது எம்.எல்.ஏ. பங்கேற்பு

  திருச்சி:

  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்டத்தின் நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். இந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டத்திற்கு தேர்தல் அதிகாரியாக தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட் கான், கிளைப் பகுதி, ஒன்றியம், பேரூராட்சி, நகரம், நிர்வாக தேர்தலை நடத்தி புதிய மாவட்ட தலைமை நிர்வாகிகளை தேர்வு செய்தார். இதில் திருச்சி மாவட்ட தலைவராக முகமது ராஜா பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது மற்றும் தமுமுக மாநில பொருளாளர் பொறியாளர் சபியுல்லா கான் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

  அதனைத் தொடர்ந்து மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ கூறும்போது :

  தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி காந்திஜியின் பிறந்தநாளையொட்டி ஆர் எஸ் எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உச்ச நீதிமன்றம் நிபந்தனை அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடையாணையை பெற வேண்டும்.தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது அதில் ஈடுபட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளாக இருந்தால் அந்தக் குற்றத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×