என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
  X

  விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடந்தது
  • சங்பரிவார் அமைப்பை கண்டித்து

  திருச்சி:

  தமிழகத்தில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மத தலைவர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தனர். அந்த வகையில், திருவள்ளுவர், பெரியார் ஆகியோரை தொடர்ந்து டாக்டர் அம்பேத்காருக்கு காவி, திருநீறு, குங்குமமிட்டு அவமதிக்கும் சனாதன சங்பரிவார் அமைப்பை கண்டித்து இன்று தமிழக முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டச் செயலாளர் அருள் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், தலைவர்களை அவமதிக்கும் விதமாக செயல்படும் அர்ஜூன்சம்பத் மற்றும் சங்பரிவார் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை தொழிலாளர் முன்னணியின் மாநில துணைச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன், மாநில நிர்வாகி அரசு, மாவட்ட நிர்வாகிகள் புல்லட்லாரன்ஸ், சந்தன்மொழி, பொன்.முருகேசன், கனியமுதன், பெல்.விஜயபாலு, பெல்.சந்திரசேகரன், கலியன் என்ற கலியமூர்த்தி, மாவட்ட துணைசெயலாளர் அப்துல் ரஹீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×