search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருச்சி தென்னூரில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
    X

    திருச்சி தென்னூரில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

    • திருச்சி தென்னூர் அண்ணா நகர் காந்தியடிகள் தெருவை சேர்ந்தவர் உஷாராணி (வயது 61).
    • உஷாராணி நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் கிடந்த நகையை பறித்து சென்றனர்.

    திருச்சி

    திருச்சி தென்னூர் அண்ணா நகர் காந்தியடிகள் தெருவை சேர்ந்தவர் உஷாராணி (வயது 61). இவர் தென்னூர் அண்ணா நகர் கம்பர் தெரு கற்பகம் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் அருகே தன்னுடைய பேரனுடன் நடந்து சென்றார். அப்போது எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் உஷாராணி கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தங்கத் தாலி செயினை பறித்து சென்றார்.

    உடனே உஷாராணி திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அந்த பகுதியில் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர் தப்பிச் சென்றார். இதுகுறித்து அவர் தில்லை நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி விமான நிலையம் அம்பலக்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (37). இவருடைய மகள் தேவிகா (21). பி.ஏ. படித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் வெள்ளையம்மாள் தன்னுடைய தம்பி பாலாவிற்கு தனது மகள் தேவிகாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்கிடையே கடந்த 19ம் தேதி தேவிகா வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    மாயமான தேவிகா யாரையாவது காதலித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாமனுடன் திருமணம் நிச்சயம் செய்வது பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து வெள்ளையம்மாள் திருச்சி விமான நிலைய போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×