என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காவேரி மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா
  X

  காவேரி மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி பாரதி நகர் காவேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது
  • ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான 150 மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்

  திருச்சி:

  திருச்சி வயலூர் ரோடு பாரதி நகர் 13-வது கிராசில் அமைந்துள்ள காவேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் கல்யாணி தலைமை தாங்கினார்.

  இதில் பள்ளி விளையாட்டு துறை ஆசிரியை வித்யா, என்சி.சி. ஆசிரியை பிரியா கௌசல்யா ஆகியோர் மாணவிகளுக்கு யோகா பயிற்சிகளை அளித்தனர்.

  முகாமில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான 150 மாணவிகள் பங்கேற்றனர். அவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

  யோகா பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகளை பள்ளி செயலாளர் கோபிநாதன் பாராட்டினார்.

  நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அலுவலர், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×