search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் அரசு பஸ்களை பராமரிப்பதில் குறைபாடு - தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றசாட்டு
    X

    திருச்சியில் அரசு பஸ்களை பராமரிப்பதில் குறைபாடு - தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றசாட்டு

    • திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • திருச்சி மாவட்டத்தில் 438 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்சி :

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசு பஸ்களை முறையாக பராமரிக்காததே காரணம் என டிரைவர்கள் தரப்பில் குற்றச்சாட்டப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்திற்கு திருச்சியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் டிரைவர் கூறுகையில், தமிழக அரசு டவுன் பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய இலவசம் என அறிவித்துள்ளது. இந்த டிக்கெட் கட்டணத்திற்கான மானியத்தை போக்குவரத்துக் கழகத்திற்கு முறையாக வழங்கவில்லை. இதனால் சீராக பஸ்கள் பராமரிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் நாங்கள் எங்கள் சொந்த பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கிறது.

    இதுபற்றி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் 438 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் தமிழக அரசின் இலவச கட்டணத்துக்குள் வருகிறது. தினமும் ரூ.13 ஆயிரம் வசூல் செய்த பஸ்ஸில் தற்போது ரூ.3000 கூட வசூல் ஆகவில்லை.

    டிரைவர், கண்டக்டர்கள் விடுமுறை இல்லாமல் இரண்டு ஷிப்ட் தொடர்ச்சியாக பணியாற்ற நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதுவும் விபத்துக்கு காரணமாக இருக்கிறது. எனவே தமிழக அரசு அரசு போக்குவரத்து கழக செயல்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    இதுபற்றி திருச்சி அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, டிரைவர்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவது நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அரசு பஸ்கள் வழக்கம் போல் சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. உபகரணங்களும் அவ்வப்போது மாற்றப்படுகின்றன என்றார்.

    Next Story
    ×