என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒற்றை தலைைமயாக எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும்-முன்னாள் எம்.பி. குமார் பேட்டி
- அ.தி.மு.க.வின் ஒற்றை தலைைமயாக எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் என்று திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கூறினார்
- ஒற்றை, இரட்டை தலைமை பிரச்சினை நிலை நீடித்து வந்தால் அ.தி.மு.க. வருகின்ற சட்டமன்ற தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை சந்திக்கும்
திருச்சி:
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது அ.தி.மு.க.வின் தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றை தலைமை, இரட்டை தலைமை விவகாரம் மக்களிடம் நம்பிக்கையை இழந்து வருகிறது. இது போன்ற நிலை நீடித்து வந்தால் அ.தி.மு.க. வருகின்ற சட்டமன்ற தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை சந்திக்கும்.
ஆகவே இரட்டை தலைமை விவகாரத்தில் ஒற்றை தலைமை உருவாக வேண்டும். அதுவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. செயல்பட வேண்டும். எங்கள் மாவட்டத்தில் உள்ள பொது மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
அனைவருடைய கருத்தாக தான் இந்த செயலை நாங்கள் சொல்கிறோம். தீர்மானம் தயார் செய்வதற்கு குழு உள்ளது. கடந்த நான்கரை ஆண்டு காலமாக ஆட்சி செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தன்மையோடு செயல்பட்டார்.
அதுமட்டுமில்லாமல் அதிக இன்னல்களையும் இடர்பாடுகளையும் சந்தித்தவர். அ.தி.மு.க. ஜாதி ரீதியாக செயல்படவில்லை. சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது திருவெரும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர், பொன்மலை பாலு, கார்த்திக் மற்றும் வட்ட செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.