என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருச்சியில் சிலம்பாட்ட போட்டிகள்
  X

  திருச்சியில் சிலம்பாட்ட போட்டிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி மாவட்ட அமைச்சூர் சிலம்பம் அடிமுறை சங்கம் மற்றும் வேழம் சிலம்ப கூடம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி சப்-ஜூனியர் பிரிவுக்கு நடத்தப்பட்டது.
  • சப் ஜூனியர் பிரிவில் 10 வயது முதல் 14 வயது உட்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

  திருச்சி:

  திருச்சி மாவட்ட அமைச்சூர் சிலம்பம் அடிமுறை சங்கம் மற்றும் வேழம் சிலம்ப கூடம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி சப்-ஜூனியர் பிரிவுக்கு நடத்தப்பட்டது.

  திருச்சி மாவட்ட அமைச்சூர் சங்கத் தலைவர் ஆர். செந்தில்குமார், வேழம் சிலம்ப தற்காப்பு கலை கூடத்தின் தலைவரும், படைக்கலத் தொழிற்சாலை இளநிலை பணி மேலாளர் ஆர். சந்திரசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சப் ஜூனியர் பிரிவில் 10 வயது முதல் 14 வயது உட்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

  இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பை விழாவில் சிறப்பு விருந்தினராக படைக்கலத் தொழிற்சாலை துணை பொது மேலாளர் விஷ்ணு கலந்து கொண்டு சான்றிதழையும் பதக்கங்களையும் வழங்கினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் துணைத் தலைவர் மணிசங்கர், படைக்கலத் தொழிற்சாலை செயலாளர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  வெற்றி பெற்றவர்கள் வரும் 9,10,11 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகின்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட அமைச்சூர் சிலம்பம் அடிமுறை சங்க செயலாளர் விஜயகுமார் செய்திருந்தார். முடிவில் சங்க பொருளாளர் கமலேஷ் நன்றி கூறினார்.

  Next Story
  ×